சீனாவில் ஆடை கட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!
சீனாவில் தேசத்தின் “உணர்வுகளை புண்படுத்தும்” ஆடைகள் விரைவில் தடை செய்யப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்திய வரைவு திருத்தங்கள் சட்டத்தின் படி, “சீன மக்களின் உணர்வுகளுக்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படும ஆடைகளுக்கும், பேச்சுக்களுக்கும் அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறி தொடர்ச்சியாக மேற்படி இரு செயல்களையும் புரிபவர்களுக்கு அதிகபட்சமாக சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சீன அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. குறிப்பாக குடியிருப்பாளர்கள் ஆடைகள் என்பது ஒவ்வரினதும் சொந்த விருப்பம் எனத் தெரிவித்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)





