இலங்கை

பம்பலப்பிட்டி- பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிள் மீது கத்திக்​குத்து

பம்பலப்பிட்டி பொன்சேகா வீதியில், அளுத்கடை இலக்கம் 06 இல் அமைந்துள்ள நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருபர், உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை கழற்றும் சத்தம் கேட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் தப்பியோட முயற்சித்தனர். அதிலொருவரே கத்தியால் பொலிஸ் கான்ஸ்டபிளை சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டார்.

கான்ஸ்டபிளின் வலது கை வெட்டப்பட்டதாகவும், சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்