தென்கொரியா சென்ற இலங்கையின் இரு வில்வித்தை வீரர்களை காணவில்லை
தென்கொரியாவிற்கு நிபுணர் பயிற்சிக்காக சென்ற இலங்கை தேசிய மட்ட வில்வித்தை வீரர்கள் இருவர் அந்நாட்டில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வில்வித்தை சங்கம் (SLAA) விளையாட்டு அமைச்சின் அனுமதியுடன் ஐந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவரை பயிற்சி அமர்வுக்கு அனுப்பியிருந்தது.
இருப்பினும், இரண்டு வீரர்கள் தென் கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அணி நிர்வாகத்திற்கோ மற்ற வீரர்களுக்கோ தெரிவிக்காமல் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு வீரர்களும் இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் என்று கூறப்படுகிறது.
அதன்படி, ஆகஸ்ட் 21-25 வரை கொரியாவில் நடைபெற்ற மேற்படி பயிற்சியில் மூன்று வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை வில்வித்தை சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் கடந்தாட்சி, இச்சம்பவம் தொடர்பாக அணி முகாமையாளரிடம் இருந்து கிடைத்த அறிக்கையின்படி, விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் மற்றும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை விளையாட்டு அதிகாரிகள் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.