இலங்கையில் இனி பணம் அச்சிடுவது மட்டுப்படுத்தப்படும்
மத்திய வங்கியையும் அதன் செயற்பாடுகளையும் மேலும் சுதந்திரமானதாக மாற்றும் வகையில் நிறைவேற்றப்பட்ட மத்திய வங்கிச் சட்டம் இன்று (15) முதல் அமுலுக்கு வரவுள்ளது.
மத்திய வங்கியினால் பணம் அச்சிடுவது இனி மட்டுப்படுத்தப்படும் என பதில் நிதியமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் ஒரு சிறப்புப் பாதுகாப்புப் பிரச்சனை அல்லது உலகத் தரம் வாய்ந்த சுகாதாரப் பிரச்சனை ஏற்பட்டால், விதிவிலக்கான சூழ்நிலையில் மட்டுமே பணம் அச்சிட அனுமதிக்கப்படுகிறது.
வழங்கப்பட்ட திறைசேரி உண்டியல்களின் பெறுமதியில் 5%க்கு மிகாமல் தொகையை மாத்திரமே அச்சிட முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் மத்திய வங்கி மத்திய வங்கி சட்டத்தின் சில விசேட விடயங்கள் குறித்து பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கமளித்துள்ளார்.