உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!! கனேடிய பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை
அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், சில்லறை விற்பனைக் கடைகளுக்கு புதிய வரி விதிக்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.
வால்மார்ட் மற்றும் காஸ்ட்கோ உள்ளிட்ட ஐந்து பெரிய சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளின் தலைவர்கள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அவசரத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ட்ரூடோ கூறினார்.
‘இலாபங்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க போராடும் மக்களின் முதுகில் வைக்கப்படக்கூடாது.’ என அவர் வலிறுயுத்தியுள்ளார்.
பொது அங்கீகார மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், தனது தலைமைத்துவத்தைப் பற்றிய கேள்விகளை எதிர்கொண்டுள்ள ட்ரூடோ, வாழ்க்கைச் செலவுக் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதிய வாடகை அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை வரி விலக்கையும் அறிவித்துள்ளார்.
சூப்பர் மார்க்கெட் சங்கிலிகள் நடுத்தர வர்க்கத்தினருக்கும், அதில் சேர கடினமாக உழைக்கும் மக்களுக்கும் உண்மையான நிவாரணம் வழங்கவில்லை என்றால் அரசாங்கம் அடுத்த நடவடிக்கை எடுக்கும் என்று கனேடிய பிரதமர் வலியுறுத்தினார்.