ஆதரவற்ற சிறார்கள் தான் இலக்கு… இளைஞர் அளித்த வாக்குமூலத்தால் அதிர்சியடைந்த பொலிஸார்!
ஜிம்பாவே நாட்டில் ஆதரவற்ற சாலையில் திரியும் சிறார்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்டதாக இளைஞர் ஒருவர் அளித்த வாக்குமூலம் மொத்த நாட்டு மக்களையும் நடுங்க வைத்துள்ளது.
ஜிம்பாவேவின் ஹராரே பகுதியை சேர்ந்த 20 வயதான அந்த இளைஞன் மீது இதுபோன்ற 8 வழக்குகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தெருவோரம் தூக்கத்தில் இருக்கும் சிறார்களை கொடூரமாக தாக்கி கொன்று விட்டு, அவர்களின் உடல் பாகங்களை சாப்பிட்டதாக பொலிஸாரிடம் ஒப்புக்கொண்ட அந்த இளைஞன், பின்னர் தாம் அப்படி கூற கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளான்.
கொடூர கொலைகளை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டாலும், மனித மாமிசம் உண்டதாக கூறவில்லை என்றே சாதித்துள்ளான். அந்த இளைஞர் மீது தற்போது ஐந்து கொலை வழக்கும், கொலை முயற்சி வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 8 முதல் செப்டம்பர் 4 வரையில் இந்த கொடூரங்களை அந்த இளைஞர் நிகழ்த்தியுள்ளதாகவே விசாரணையில் தெரிய வந்துள்ளது. கல்லால் தலையை தாக்கி கொலை செய்து, பின்னர் உடல் உறுப்புகளை வெட்டியதாக கூறுகின்றனர்.
தொடர்ந்து மாமிசத்தை சமைத்து உண்டதாக கூறி வந்த இளைஞர், தற்போது மறுத்து வருகிறார். ஹராரே பகுதியில் செப்டம்பர் 4ம் திகதி பொலிஸாரிடம் சிக்கியுள்ளான். மேலும், ஹராரே பகுதியில் மட்டும் குறைந்தது 5 கொலைகள் செய்திருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், Bulawayo பகுதியில் மூன்று படுகொலை சம்பவம் தொடர்பிலும் இவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த கொலைகள் அனைத்தும் ஏதேனும் சடங்குகளுக்காக முன்னெடுக்கப்பட்டதா என்பது தொடர்பில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.