புடினை சந்திக்க ரஷ்யா வந்துள்ள வட கொரிய அதிபர்…
ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திப்பதற்காக, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ரஷ்யா வந்துள்ளார். ஆனால், அவர் ஒரு பெரிய ஏமாற்றத்தை சந்திக்க இருப்பதாக ரஷ்ய எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளார்கள்.
வட கொரியாவிலிருந்து, தனது ஆடம்பர ரயிலில் புறப்பட்ட வட கொரிய ஜனாதிபதி கிம், இரவு 11.30 மணிக்கு ரஷ்யாவிலுள்ள Vladivostok நகரை வந்தடைந்தார்.அங்கு அவருக்கு மேளதாளங்கள் முழங்க, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய அமைச்சர் ஒருவர் கிம்மை வரவேற்றார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திப்பதற்காக கிம் ரஷ்யா வந்துள்ள விடயம், உக்ரைன் போர் தொடர்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கிம், ரஷ்யாவுக்கு பயங்கர ஆயுதங்களை வழங்கலாம் என்பதால் ஒருவித அச்சம் உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை.
ஆனால், புடினைக் காண வந்துள்ள கிம்முக்கு, பெரிய ஏமாற்றம் காத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் ரஷ்ய எதிர்க்கட்சியினரும், புடின் விமர்சகர்களும். புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில், படுத்த படுக்கையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது ஊடகம் ஒன்று.
கிம் புடினை சந்திக்கப்போவதில்லை, அவரைப்போலவே தோற்றமளிக்கும் அவருடைய டூப்களில் ஒருவரைத்தான் அவர்சந்திக்கப்போகிறார் என்னும் விடயம் அவருக்குத் தெரியாது என்கிறார்கள் அந்த ஊடகம் சார்ந்தவர்கள்.
இதற்கிடையில், உக்ரைன் செய்தியாளரான Savik Shuster என்பவர், புடின் இந்த அக்டோபர் மாதம் வரை கூட தாக்குப்பிடிக்க மாட்டார் என்றும், இந்த விடயத்தை புடினிடமே நேரடியாக மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் என்றும் கூறியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.