இலங்கையில் உச்சக்கட்டத்தை எட்டிய எலுமிச்சை விலை

இலங்கையில் எலுமிச்சை விலை பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மக்கள் தற்போது நாட்டில் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை விற்பனை செய்யப்படுகின்றது.
இவ்வாறான விலைக்கு விற்கப்படும் எலுமிச்சை மிகவும் சிறியது எனவும் தெரிவித்தனர்.
இந் நிலைமைகள் குறித்து நகர காய்கறி வியாபாரிகள் பலரிடம் கேட்டபோது, தற்போது சந்தையில் எலுமிச்சை தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்த நிலைகளால் எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
(Visited 14 times, 1 visits today)