மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாவியினை அண்டிய பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் !
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாவியினை அண்டிய பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை போரதீவுப்பற்று பிரதேசசபையும் பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்துள்ளனர் .
போரதீவுப்பற்று பிரதேச செயலாளா பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம்,போரதீவு, முனைத்தீவு ஆகிய பகுதிகளை அண்டியுள்ள வாவியின் கரையில் உள்ள நாணல் புற்கள் மற்றும் கண்டல் தாவரங்களிலேயே இந்த தீபரவல் ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் வாகனங்கள் மற்றும் ஊழியர்களின் உதவிகளுடன் தீயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயின் காரணமாக பெருமளவான பறவைகளும் அதனை அண்டி வாழும் விலங்கினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
தீச்சம்பவம் ஏற்பட்ட பகுதிக்கு வருகைதந்த போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ரங்கநாதன் தீ கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தினை பார்வையிட்டதுடன் குறித்த தீபரவலை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்தும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கையெடுத்துள்ளனர்