ஐரோப்பா

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 22ஆம் ஆண்டு நினைவு தினம்!

உலகின் அதிக சக்தி வாய்ந்த ராணுவ படை கொண்ட நாடாக விளங்கும் அமெரிக்காவின், நியூயார்க் நகரத்தில் உலகை உலக்கிய இரட்டை கோபுர தாக்குதல் இதே தேதியில் 22 வருடங்களுக்கு முன் செப்டம்பர் 11 2001 ஆம் ஆண்டு காலை 8:46 மணிக்கு நடந்து முடிந்தது.

ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து இரட்டை கோபுரத்தை நோக்கி பறக்கிறது என்பதாலே. சில நொடிகளில், இரட்டை கோபுரத்தின் வடக்கு கட்டிடத்தின் 93-99 இடைப்பட்ட பகுதியில் விமானம் மோதி வெடித்துச் சிதறியது.

இந்த தாக்குதலையடுத்து கட்டிடங்கள் மளமளவென சரியத் தொடங்கியது. தாக்குதல் காரணமாக இரட்டை கோபுரத்தில் ஏற்பட்ட தீ கொழுந்துவிட்டு எரிந்தது. நியூயார்க் வான் முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் கட்டிடங்கள் சிக்கிக் கொண்டிருந்தது ஒருபுறமிருக்க, சாலைகளில் சென்றவர்கள் மீதும் கட்டிடத்தின் பாகங்கள் விழத் தொடங்கியது.என்ன நடக்கிறது என தெரியாமல் மக்கள் திகைத்து கொண்டு இருக்கும் போதே அடுத்த தாக்குதல் அரங்கேறியது. ஆனால், இந்த முறை இரட்டை கோபுரத்தின் மீது அல்ல, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் மீது. அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே உறைந்து போனது.இந்த நேரத்தில் 4வதாக மற்றொரு விமானம் கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

எந்த இடத்தில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கபட்ட நேரத்தில் பென்சில்வேனியா மாகாணம் அருகே விழுந்து நொறுங்கியது.அனைவரும் இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பு எது என்பதைத் தேடத் தொடங்கினர். தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது அல் கொய்தா.

19 பேரைக் கொண்டு இந்த தாக்குதலை அல் கொய்தா நடத்தியது அம்பலமானது.இதனையடுத்து இந்த தாக்குதலை நடத்திய அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானில் ஒரு சுரங்கத்தில் பதுங்கி இருப்பதை அறிந்து அமெரிக்கா அதிரடியாக விமானங்களின் மூலம் ரானுவத்தை அனுப்பி சுட்டு வீழ்த்தியது.

இந்த கொடூர தாக்குதலில் மொத்தம் 2 ஆயிரத்து 753 பேர் பலியாகி இருந்தனர். அதில் 1642 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.மீதமுள்ள 1,100 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. நியூயார்க் ஆய்வகத்தில் இன்னும் கூட அந்த உடல்களை அடையாளம் காணும் பணி என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவரது உடல் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த சம்பவத்தில் பலியானவர்களின் உடல் சிதைந்து யாருடைய உடல் என்பதை அறிய முடியாத அளவிற்கு உருக்குலைந்து இருப்பதால் டிஎன்ஏ சோதனை நடத்துவதும், ஆய்வாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது

உலகின் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவுக்குள் வந்து, விமானங்களைக் கடத்தி அதை வைத்து இரட்டை கோபுரங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் தகர்தது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் மிகப் பெரிய தோல்வியாக இந்நிகழ்வு கருதப்படுகிறது.இதன் பிறகே அமெரிக்கா அதன் பாதுகாப்பு கட்டமைப்புகளைப் பல மடங்கு வலுவாக்கியது.இந்த துயர சம்பவத தாக்குதலின் 22 ஆண்டுகள் நினைவு தினம் இன்று அமெரிக்கவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்