பொழுதுபோக்கு

இனி ஆதி குணசேகரன் இவர்தான்? வெளியான அறிவிப்பு

சன் டிவியில் முன்னணி தொடராக ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக மாஸ் காட்டி வந்தார் நடிகர் மாரிமுத்து.

அவர் உயிரிழந்த நிலையில் அடுத்த குணசேகரன் குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேரக்டரில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

எதிர்நீச்சல் சீரியல் குறித்து பேசிய நடிகர் வேல ராமமூர்த்தி:

நடிகர் மாரிமுத்து நடிகர், உதவி இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், சீரியல் நடிகர் என பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வந்தவர். கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் தன்னை நிரூபிக்க போராடிவந்த மாரிமுத்து கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ராஜ்கிரண், மணிரத்னம், எஸ்.ஜே. சூர்யா போன்ற முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.

25 ஆண்டுகளாக சினிமாவில் உள்ள இவர் சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும் இருந்துள்ளார். வடிவேலுவின் சில பெஸ்ட் காமெடிக்களுக்கு இவர் எழுதிய டயலாக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தன்னுடைய கேரியரை சினிமாவில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராகத்தான் துவங்கினார் மாரிமுத்து. இத்தனை சிறப்புகள் இருந்தபோதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம்தான் அதிகமான பிரபலத்தை பெற்றார் மாரிமுத்து. இந்தத் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டர் மூலை முடுக்கெல்லாம் இவரை பிரபலப்படுத்தியது.

தன்னுடைய அசால்ட்டான உடல்மொழி மற்றும் டயலாக் டெலிவரி மூலம் ரசிகர்களின் குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்பட்டார். நெகட்டிவ் ஷேடில் இந்த கேரக்டர் இருந்தபோதிலும் அதிகமான ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் கவர்ந்து தொடரின் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கவும் காரணமாக அமைந்தார். சேனலின் முதலிடத்தில் இந்தத் தொடர் தொடர்ந்து நீடிக்கவும் மாரிமுத்து முக்கியமான காரணமாக இருந்தார்

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக மாரடைப்பால் மாரிமுத்து காலமானார். எதிர்நீச்சல் தொடரின் டப்பிங்கின்போது, நெஞ்சில் வலியை உணர்ந்த அவர், தானே காரோட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு கோலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதிகமான திரைத்துறை நட்சத்திரங்கள் நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது இரங்கல்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் எதிர்நீச்சல் தொடரில் மாரிமுத்துவிற்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி இந்தத் தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்தத் தொடரில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்துள்ளதை வேல ராமமூர்த்தி உறுதி செய்துள்ளார். ஆனால் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவதால் இதுகுறித்து இன்னும் உறுதியாகவில்லை என்றும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!