செய்தி

புலம் பெயர் தொழிலாளர்களுக்கான வீட்டுத்திட்டம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து!

வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான உத்தேச வீட்டுத் திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

இந்த திட்டம் குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனுஷ நாணயகார,  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக, புலம்பெயர் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இனங்காணப்பட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி இந்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவாகத் திருத்தம் செய்து அமைச்சரவையில் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி