இலங்கை

தனது ஓய்வூதிய பணத்தில் தனிநபர் ஒருவரின் முன் மாதிரியான செயல்பாடு! மகிழ்ச்சியில் மாணவர்கள்

மணி மாஸ்டர் விருதுக்கான திருக்குறள் போட்டியின் பரிசலிப்பு விழா இன்றைய தினம் வியாழக்கிழமை(7) மதியம் 1.45 மணியளவில் மன்னார் நகர சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

மணி மாஸ்டரின் புதல்வரும் பொறியியலாளருமான விமலேஸ்வரன் தலைமையில் குறித்த பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழியை வளர்க்கும் வகையிலும் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும் 4 பிரிவுகளில் குறித்த போட்டி இடம்பெற்றது.

-முதல் இடத்தை பெற்ற 3 போட்டியாளர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவும் ,2 ஆம் இடத்தை பெற்ற 3 போட்டியாளர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாவும் ,3 ஆம் இடத்தை பெற்ற 3 போட்டியாளர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாவும், வழங்கப் பட்டுள்ளதோடு பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஏனைய போட்டியாளர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் பணப்பரிசில் வழங்கப்பட்டதோடு ,மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களின் பணப்பரிசில்களில் 7.500 ரூபாய் வங்கியில் வைப்பில் இடப்பட்டு வங்கி புத்தகம் கையளிக்கப் பட்டதோடு,மிகுதி பணம் கையில் ஒப்படைக்கப்பட்டது.

-மணி மாஸ்டர் அவர்களின் ஓய்வூதிய பணத்தில் இருந்து சுமார் 5 இலட்சம் ரூபாவும்,அவரின் 4 புதல்வர்களும் இணைந்து 5 இலட்சம் ரூபா வையும் சேர்த்து குறித்த பரிசளிப்பு விழாவை நடத்தி அனைவருக்கும் முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளனர்.

-குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி ஜீ.டி.தேவராஜா, மடு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ஏ.கே.வொலன்ரைன்,மன்னார் உதவி வலயக்கல்வி பணிப்பாளர் கே.மனோரஞ்சன்,மடு உதவி வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.ஏ.கலவண்ணன் மற்றும் பாடசாலை முதல்வர் களும் கலந்து கொண்டு பரிசில்களையும்,சான்றிதல்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்