யாழ்ப்பாணத்தில் தாலிக்கொடியை திருடிச் சென்ற பெண்ணுக்கு பிணை
யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டில் தாலிக்கொடி திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்தப் பெண்ணை பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
யாழ்ப்பாணம், சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றின் மேசையில் இருந்த தாலிக்கொடி காணவில்லை என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தினர்.
தாலிக்கொடி காணாமல் போன தினத்தன்று குறித்த வீட்டுக்குச் சென்ற உறவினர் பெண் ஒருவர் மீது வீட்டில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பெண்ணை பொலிசார் கைது செய்து விசாரித்தபோது தாலிக்கொடியை திருடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும், தாலிக்கொடியை அடகுக்கடையில் 2 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்ட பொலிஸார், நகைகளுடன் பெண்ணை கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி அந்த பெண்ணை கடுமையாக எச்சரித்து பிணையில் செல்ல அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.