ஒன்றாரியோ மாகாண அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம்

ஒன்றாறியோ மாகாணத்தின் அமைச்சரவையில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு அமைச்சராக கடமை ஆற்றி வந்த ஸ்டீவ் கிளார்க் நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.பசுமை வலய வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வீடமைப்பு அமைச்சர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வீடமைப்பு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.இவ்வாறான ஒரு பின்னணியில் முதல்வர் டக் போர்ட் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய தீர்மானித்துள்ளார்.
இதன்படி வீடமைப்பு அமைச்சராக போல் காலான்றா நியமிக்கப்பட்டுள்ளார்.ஏனைய சில அமைச்சுப் பதவிகளிலும் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)