உலகெங்கும் மில்லியன் கணக்கான பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!
உலகெங்கும் மில்லியன் கணக்கான பிள்ளைகள் படிப்பைக் கைவிட்டு வேலைக்குச் செல்வதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாட்டு நிறுவன ஊழியர் அமைப்பு இது தொடர்பில் கவலை தெரிவித்துள்ளது.
அந்தப் போக்கு, அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அமைப்பு குறிப்பிட்டது.
பாலியல் ரீதியாகவும் கூடப் பிள்ளைகள் தவறாய்ப் பயன்படுத்தப்படுவதாக, அமைப்பின் தலைமை இயக்குநர் கில்பர்ட் ஹௌஞ்போ (Gilbert Houngbo) தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்ப் பரவல், பணவீக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகிய பல்வேறு காரணங்களால் பிள்ளைகள் பள்ளியைப் பாதியிலே விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல நேர்வதாக அவர் குறிப்பிட்டார்.
உடனடியாக அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமற்போனால், நிலைமை மேலும் சிக்கலாகுமென ஹௌங்போ கூறினார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, சுமார் 160 மில்லியன் பிள்ளைகள் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.