இனங்களிடையே சகவாழ்வினையும் ஒற்றுமையினையும் எற்படுத்துவோம்: மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம்
இலங்கையில் இனங்களிடையே சகாவாழ்வினையும் ஒற்றுமையினையும் எற்படுத்தும் வகையில் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையக மக்களின் வாழ்வுரிமையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் 15,16,17ஆம் திகதிகளில் மாபெரும் மாநாட்டை நடாத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்துள்ளதாக மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வி.கே.சிவபாலன் குருக்கள் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் மற்றும் தேசிய கிறிஸ்தவ மன்றம் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தியது.
மலையக மக்கள் இந்த நாட்டிற்கு வந்து 200வது ஆண்டை குறிக்கும் மாண்புமிக மலையகம் என்னும் எழுச்சியை நினைவூட்டும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் இருப்பினை உறுதிப்படுத்திக்கொள்வோம்,தோழமையினை வெளிப்படுத்துவோம் என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேநேரம் இதன்போது பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் தேசிய கிறிஸ்தவ மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கருத்துகள் தெரிவித்தனர்.