ஜெர்மனி அரச சேவைகளினால் கடும் நெருக்கடியில் மக்கள்
ஜெர்மனி நாட்டில் அரச பொது சேவைகளில் பொது மக்களுக்கான சேவைகள் பாதிப்பு அடைந்து வருகின்றன.
ஜெர்மனியில் அரச நிர்வாகங்களால் சில கால தாமதங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.
அதனால் அரச நிர்வாக கட்டமைப்பை சில மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சியானது புதிய சட்ட நகலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக எவர் ஒருவர் ஹொட் டேல் என்று சொல்லப்படுகின்ற இருப்பிடத்துக்கு செல்லும் பொழுது ஜெர்மன் பிரஜையானவர் வதிவிட பதிவு விண்ணப்ப பத்திரம் ஒன்றை பூர்த்தி செய்தல் வேண்டும்.
எதிர் வரும் காலங்களில் இவ்வகையான நடைமுறை ஜெர்மன் பிரஜைகளுக்கு ஏற்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று விமான நிலையங்கள் ஊடாக பயணம் மேற்கொள்ளும் பொழுது சிப் பன் என்று சொல்லப்படுகின்ற சில நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன் காரணத்தினால் கூடுதலான அளவின் நேரத்தை மிகுதிப்படுத்த முடியும்.
இதேவேளையில் சில பொருளாதார கட்டமைப்புக்களிலும் இவ்வாறான அரச நிர்வாக நடைமுறைகளில் சில தளர்வுகளை ஏற்படுத்துவதற்கு ஆளும் கூட்டு கட்சிகள் இசைவு கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.