கனமழை குறித்து நான்காவது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
கனமழை குறித்து நான்காவது எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று மதியம் 1 மணி முதல் நாளை (04.09) காலை 8.30 மணி வரை இந்த அறிவிப்பு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தீவின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழை நிலைமை அடுத்த சில மணிநேரங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.