தமிழ்நாடு

வைகைப்புயலின் தம்பி மறைவிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து ஆறுதல் கூறிய அமைச்சர் மூர்த்தி

மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் வசித்து வந்த நடிகர் வடிவேலின் தம்பி ஜெகதீஸ்வரன்(52) கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் ஜெகதீஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது உடலுக்கு குடும்ப உறுப்பினர்கள் பொதுமக்கள் ஐராவதநல்லூர் பகுதியில் உள்ளவர்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வடிவேலுக்கு 5 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் மொத்தம் 7  நபர்கள் உடன் பிறந்தவர்கள்  இந்நிலையில் அவரது தம்பி ஜெகதீஸ்வரன் தற்போது காலமாகியுள்ளார்

அவரது வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மதியம் 4 மணி அளவில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி. மூர்த்தி நேரில் வந்து மலர் மாலை வைத்து மரியாதை செய்து வடிவேலுக்கு ஆறுதலை கூறினார்.

அனைவரையும் சிரிக்க வைத்த வடிவேலு தன் சகோதரர் மறைவால் சோகமடைந்ததை கண்டு கூடியிருந்தவர்களும் சோகமடைந்தனர்.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்