பொழுதுபோக்கு

லியோ ஆடியோ லான்ச் எங்கே, எப்போது தெரியுமா?. அதிரடியாக வந்த அப்டேட்

இப்போது லியோ படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் லியோ.

அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர்களான மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர்களை தொடர்ந்து அர்ஜுன், மன்சூர் அலிகான் போன்ற பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் அர்ஜுனின் அறிமுக வீடியோ வெளியாகி ஹைப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

மேலும் லியோ படத்தின் ஆடியோ லான்ச் வெளிநாட்டில் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக படக்குழுவும் முயற்சி செய்த நிலையில் செப்டம்பர் மாதம் முழுவதுமே எல்லா ஆடிட்டோரியம் புக்காகியுள்ளதாம்.

ஆகையால் வேறு வழியில்லாமல் இப்போது சென்னையில் லியோ ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

அதுவும் எப்போதுமே பெரிய நடிகர்களின் ஆடியோ லான்ச் நடக்கும் இடமான நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் இதற்கான ஏற்பாடுகள் நடக்க இருக்கிறதாம்.

மேலும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையை கணக்கிட்டு வெளியாக இருக்கிறது. எனவே செப்டம்பர் 30ஆம் தேதி லியோ ஆடியோ லான்ச் நடக்க இருக்கிறது.

விஜய் பொருத்தவரையில் தன்னுடைய படத்தின் ஆடியோ லான்ச்சில் நிறைய விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் சமீப காலமாக விஜய்யை சுற்றி நிறைய சச்சையான விஷயங்கள் நடந்து வரும் நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லியோ ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்வார் என்று தெரிகிறது.

இதில் சூப்பர் ஸ்டார் பட்டம், ஜெயிலர் வசூல், அரசியல் நகர்வு ஆகியவற்றை கண்டிப்பாக விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்நிகழ்ச்சி நடக்க இன்னும் ஒரு மாத கால அவகாசம் மட்டுமே உள்ளதால் இப்போது படக்குழு அதற்காக ஆயத்தமாகி கொண்டிருக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

 

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!