முல்லைத்தீவு- பண்டார வன்னியனின் 220வது வெற்றி நாள் நினைவு கூரல் நிகழ்வு
முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஒல்லாந்தர் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட வன்னியின் இறுதி மன்ரனன் மாவீரன் பண்டார வன்னியனின் 220 ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு கூரல் முல்லைத்தீவு நகரில் உள்ள பண்டாரவன்னியனின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி நினைவுகூரல் மேற்கொள்ளப்பட்டது.
இதில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இ.ஜெகதீசன், தமிழரசு கட்சியின் உறுப்பினர்களான கி.சிவகுரு, இ.ஜெரோன்சன், மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஆங்கிலேயரின் கோட்டையை 1803ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் போரிட்டு கைப்பற்றி, இரண்டு பீரங்கிகளையும் மாவீரன் பண்டார வன்னியன் கைப்பற்றிய நாளாக இன்றையநாள் அடையாளப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .