சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர்
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில், சீன வம்சாவளியைச் சேர்ந்த இருவரை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சரான, தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கியுள்ளார்.
சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் முதலாம் திகதி நடக்கிறது.
75 வயதான எங் கோக் சோங் ஏற்கனவே போட்டியிடுகிறார். சிங்கப்பூர் அரசு நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
மேலும், 75 வயதான டான் கின் லியோன், அரசுக்கு சொந்தமான இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஓய்வு பெற்றவர். இருவரும் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் இவர்களுக்குப் போட்டியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினமும் களம் இறங்கியுள்ளார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர்.
கல்வி மற்றும் நிதி அமைச்சராகவும் சிங்கப்பூர் துணைப் பிரதமராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது மூவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.