இலங்கை

காலி சிறையில் பரவிவரும் இனம்தெரியாத பக்டீரியா தொற்றால் பலர் பாதிப்பு!

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்தந்த உயிரிழப்புகளுக்கு பாக்டீரியா தொற்றுதான் காரணம் என தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நோய் அறிகுறிகளுடன் மேலும் 7 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  அந்த நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் தோல் தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களும் ரிமாண்ட் சிறையில் உள்ள கைதிகள் எனவும்  இச்சம்பவம் தொடர்பாக  அறிக்கையைப் பெறவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தொற்றினால்  காலி சிறைச்சாலையில் தற்போது 1,023 கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!