அமெரிக்காவுடன் தென்கொரியா கூட்டு இராணுவப் பயிற்சி!!! ஏவுகணை விட்டு சோதனை செய்த கிம் ஜாங் உன்
வடகொரியா கப்பல் ஏவுகணை சோதனையை நடத்தியது.
இந்த ஏவுகணையை சோதனை செய்ய வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தென்கொரியாவும் அமெரிக்காவில் இராணுவப் பயிற்சியை தொடங்கிய நேரத்தில்தான் இந்த க்ரூஸ் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வட கொரிய கப்பல் ஏவுகணையின் செயல்முறையை கண்காணிக்க கிம் ஜாங்-உன் உடனிருந்தார் என்று அந்நாட்டின் அரசு ஊடக நிறுவனமான KCNA இன்று தெரிவித்துள்ளது.
நாட்டின் தலைவர் கிழக்குக் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படைக் கப்பற்படையை பார்வையிட்டதாகவும், போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவுவதை மேற்பார்வையிட்டதாகவும் KCNA அறிவித்தது.
(Visited 10 times, 1 visits today)





