100க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தோரை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 60 பேர் பலி

புலம் பெயர்ந்தோரை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 60 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க தீவு நாடான கேப் வெர்டே அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படகில் இருந்து கடலில் குதித்து நீந்திய 38 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
படகு கவிழ்ந்ததை மீனவர்கள் சிலர் பார்த்து அதிகாரிகளுக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து கடலோரக் காவல்படையினர் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.
உயிர் பிழைத்தவர்களை இருகரம் நீட்டி வரவேற்போம் என்றும் உயிரிழந்தவர்களுக்கு உரியமரியாதையுடன் இறுதிச்சடங்குகளைச் செய்வோம் என்றும் கேப் வெர்டேயின் அமைச்சர் பிலோமினா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)