டொமினிகன் குடியரசில் ஏற்பட்ட பரபரப்பு – மர்ம பொருள் வெடித்து 10 பேர் பலி

கரீபியன் தீவுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசின் தலைநகரான சான் கிறிஸ்டோபலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் மர்மபொருள் வெடித்தது.
நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஒரு கட்டிடத்தின் உள்ளே நிகழ்ந்த இந்த சக்திவாய்ந்த வெடிப்பை தொடர்ந்து அருகில் இருந்த கடைகளில் தீ பரவியது.
இதில், 4 மாத குழந்தை உட்பட 10 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர். 11 பேர் காணவில்லை என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
(Visited 13 times, 1 visits today)