இலங்கை

கொழும்பில் 08 மணித்தியாலங்கள் இருளில் மூழ்கிய வைத்தியசாலை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பல கட்டிடங்களில் நேற்று (14.08)  காலை 10 மணி முதல் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், நோயாளிகள், வைத்தியர்கள், ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இண்டர்காம் அமைப்பு மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்பும் முடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளகது.

இதனால் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதால் அறுவை சிகிச்சைகள் மின் விளக்குகளின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வைத்தியசாலையின் பராமரிப்பு பிரிவில் ஒன்பது நிருவாக உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவதுடன், அவர்கள் கடமையாற்றும் போதே இந்த மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மின் தடை சீராகியுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்