சட்டவிரோதமாக போலந்திற்கு செல்ல முயன்ற 160 பேர் கைது!
பெலாரஸில் இருந்து போலந்துக்கு செல்ல முயன்ற 160 பேரை எல்லைக் காவலர்கள் தடுத்தி நிறுத்தியுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை குடிமக்கள் உட்பட 160 பேர் நேற்று போலந்திற்குள் செல்ல முயன்றதாக எல்லை அதிகாரிகளை மேற்கோள் காட்டி போலந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டவிரோத எல்லைக் கடப்புகளுக்கு உதவியதற்காக இந்த ஆண்டு ஏற்கனவே 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த 2022 இல் இருந்து இந்த வருடத்தின் ஜனவரி வரை 16 ஆயிரம் – 19 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து எல்லைப்பகுதியை பாதுகாக்கவும், கண்காணிப்பை அதிகரிப்பதற்காகவும், 1000 துருப்புகளை போலந்து அதிகாரிகள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.