ஜெர்மனியில் கடலுக்கு செல்பவர்களுக்கு விசேட எச்சரிக்கை
ஜெர்மனியில் கடலுக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்ப்பட்டுள்ளது.
ஜெர்மனிய நாட்டில் கடலுக்கு நீராட சென்றவர்களில் 192 பேர் இதுவரை உயிரிழந்து இருப்பதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனிய நாட்டில்இந்த ஆண்டு இது வரை 192 பேர் கடலில் நீந்துவதற்காக சென்று பலியாகியுள்ளனர். ஜெர்மனியின் டொச்சர் லேபன் ஸ்வெட் ரிசேர்ச் என்று சொல்லப்படுகின்ற அமைப்பானது இதனை தெரிவித்து இருக்கின்றது.
அதாவது 25-07-2023 வரை 192 பேர் இவ்வாறு இறந்ததாக தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த காலப் பகுதியில் இறந்தவர்களுடைய எண்ணிக்கை தற்பொழுது 10 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள கருத்தில் மொத்தம் 2 36000 பேர் இவ்வாறு நீச்சல் தடாகங்களில் நீராட சென்று அல்லது கடலில் குளிக்க சென்று தமது உயிரை மாய்த்து கொள்வதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் D R L G என்ற அமைப்பின் கருத்தின் படி வருடம் ஒன்றுக்கு 1300 பேர் இவ்வாறு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் பொழுது தமது அமைப்பால் காப்பாற்றப்பட்டு வருகின்றார்கள் என கூறியுள்ளது. இதனால் அவதானமற்ற இடங்களில் நீராடுவதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.