அமெரிக்காவில் மனைவியை சுட்டு கொன்ற நீதிபதி

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணம் ஆரஞ்ச் நகர் நீதிபதி ஜெப்ரி பெர்குசன் (72). இவரது மனைவி ஷெர்லி பெர்குசன். இந்த தம்பதி அனஹிம் ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், நீதிபதி ஜெப்ரி பெர்குசன் தனது மனைவி ஷெர்லியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இது தொடர்பாக ஜெப்ரியின் மகன் பொலிஸில் புகார் அளித்துள்ளான். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் நீதிபதி ஜெப்ரியை கைது செய்தனர்.
பின்னர், நீதிபதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை கைது செய்யப்பட்ட நீதிபதி ஜெப்ரி 1 மில்லியன் டொலர்கள் பிணையில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 15 times, 1 visits today)