புலம்பெயர் இலங்கையர்களால் நாட்டுக்கு கிடைத்த பெருந்தொகை பணம்!
 
																																		வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் இதுவரை இந்த பணம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜூலை மாதத்தில் தொழிலாளர்களின் பணம் 541 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது ஜூலை 2022 உடன் ஒப்பிடுகையில் 261 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.
ஜூலை 2022 இல் இலங்கைக்கு 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டது.
இதேவேளை இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 3,363.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
