வடக்கை வாட்டி வதைக்கும் மோசமான வறட்சி
நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் கடும் வரட்சியானது வட பிராந்தியத்தையும் பாதித்துள்ளதுடன், தற்போது வடக்கில் 22,666 குடும்பங்களைச் சேர்ந்த 72,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் உள்ள குளங்களில் நீர் மிக வேகமாக வற்றிவிட்டதாகவும், குடிநீர் விநியோகம் செய்யப்படும் கிணறுகள் உட்பட பல நீர் ஆதாரங்கள் முற்றாக வற்றிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வறட்சியின் காரணமாக ஏராளமான நெற்செய்கைகள் அழிந்து வைக்கோலாக மாறியுள்ளதாகவும், கால்நடைகளுக்கு உண்பதற்கு புல் இல்லை எனவும், ஆடு போன்ற விலங்குகளுக்கு இலைகள் இல்லை எனவும், குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.