இலங்கை சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்படும்?

நாட்டில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடி நிலைமை காரணமாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து இன்று (11.08) கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும், சாதகமான முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
(Visited 16 times, 1 visits today)