பிரான்ஸில் வீடொன்றை சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் Isère மாவட்டத்தில் உள்ள Morette நகரில் பெருமளவான கஞ்சாச் செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள 375 சதுர மீற்றர் தொழிற்பேட்டைப் பகுதிக்குள் இருந்து ஜோந்தார்மினர் 4.000 கஞ்சாச் செடிகளைக் கைப்பற்றி உள்ளனர்.
மின்சார உபகரணங்களால் புற ஊதாக்கதிர் (UV) உருவாக்கப்பட்டு மின் வெப்பத்துடன் இந்த கஞ்சாச் செடி வளர்க்கப்பட்டுள்ளது.
அதனை வளர்ப்பதற்கு உட்புறத்தில் வளர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
இந்தக் கைப்பற்றலின் பின்னர் நால்வர் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டனர். இதே விசாரணையில் மேலும் இரு முக்கிய போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 1100 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன
(Visited 11 times, 1 visits today)