தமிழ்நாடு

தமிழகத்தில் தாகத்திற்கு ஜூஸ் வாங்கி குடித்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்திய மாநிலம் தமிழகத்தில் 10 ரூபாய் மாஸா பழ ஜூஸ் பாக்கெட்டில் செத்து போன எலி ஒன்று கிடந்துள்ள வீடியோ வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம் பி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சீனிவாசன் மற்றும் நதியா. இவர்கள் உணவகம் ஒன்றினை நடத்தி வருகிறார்கள்.

இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அப்போது, உணவகத்திற்கு அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் உள்ள 10 ரூபாய் மாஸா ஜூஸ் பாக்கெட்டை இவருடைய மகனும், மகளும் வாங்கி வந்துள்ளனர்.

maaza / மாஸா ஜூஸ்

அப்போது சிறுவன் சரவணன், ஜூஸ் பாக்கெட்டை பிரித்து ஸ்ட்ரா வைத்து குடிக்க தொடங்கியுள்ளார்.வழக்கத்திற்கு மாறாக ஜூஸ் கசப்பாக இருந்ததால் சிறுவன் பாக்கெட்டை பிரித்து பார்த்துள்ளார். அதில், குட்டி எலி ஒன்று செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில், சிறுவன் தன் தந்தையிடம் சென்று ஜூஸ் பாக்கெட்டை காண்பித்துள்ளார். பின்பு, தந்தை சீனிவாசன் அதை வீடியோவாக எடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது, மாஸா ஜூஸ் பாக்கெட்டில் இறந்து போன எலி இருந்தது அச்சத்தையும், அதிர்ச்சியையும் கொடுக்கிறது.

(Visited 34 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்