சீனாவை உலுக்கும் வெள்ளம் – கடும் நெருக்கடியில் மக்கள்
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் மக்கள் இன்னமும் வெள்ளத்தால் சிக்கி தவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 வாரங்களுக்கு முன்னர் Doksuri சூறாவளி அந்தப் பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஜிலின் (Jilin) மாநிலத்தில், கடந்த வாரயிறுதியில் குறைந்தது 14 பேர் மாண்டதாகத் தகவல் வெளியானது.
மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் 1,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத் தடுப்பை மேம்படுத்தும் முயற்சிகளையும் அவர்கள் எடுத்துவருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்பாளர்களைக் காப்பாற்றுவது, தேவையான பொருள்களை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது, சேதமடைந்த வீடுகளையும் சாலைகளையும் சீர்செய்வது போன்ற வேலைகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
(Visited 9 times, 1 visits today)