மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
நம்மில் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு வேலைக்காக சரியான நேரத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்க்குள் இருக்கிறோம். அந்த வகையில், மாணவர்களாக இருந்தால் சரியான சமயத்திற்கு பள்ளிக்கு செல்ல வேண்டும், அதே சமயம், வேலைக்கு செல்லும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரியான சமயத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என குறிப்பிட்ட நேரத்திற்குள் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதற்காக, நம்முடைய வேலைகளை விரைவாக முடிக்க முற்படுவதுண்டு.
அந்த வகையில், நமது வாழ்க்கை முறை மாறும் போது, உணவு முறையும் மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இன்று பலரும் நாம் உண்ணகூடிய உணவை கூட, வயிற்றுப்பசி ஆறினால் போதும் என்ற எண்ணத்தில், மிகவும் வேகமாக சாப்பிட்டு விட்டு செல்கிறோம்.ஆனால் அது நமது உடலுக்கு நல்லதல்ல.
அதேசமயம் நாம் சாப்பிடுவதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி, பொறுமையாக மெதுவாக மென்று சாப்பிட்டால் நமது உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் உணவை மெதுவாக மென்று சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
செரிமானம்
நம்மில் இன்று பெரும்பாலானோருக்கு செரிமான பிரச்னை ஏற்படுவதற்கு உணவை மெதுவாக உண்ணாததும் ஒரு காரணம் தான். செரிமானம் என்பது உங்கள் வயிற்றில் மட்டும் நடக்கும் செயல்முறை அல்ல. உங்கள் புலன்கள் உணவின் நறுமணத்தையும் பார்வையையும் கண்டறியும் சமயத்தில் செரிமான செயல்முறை தொடங்குகிறது.
உணவை மெதுவாக மென்று சாப்பிடும் போது, உங்கள் மூளைக்கும், உங்கள் குடலுக்கும் சமிஞைகள் அனுப்பவும், செரிமான சாறுகள் மற்றும் நொதிகள் வெளியிடுவதற்கு நேரத்தையும் வழங்குகிறது. இதன்மூலம், செரிமானத்திற்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
கலோரி அதிகரிப்பு
நமது உடல் எடை அதிகரிப்பில் கலோரி முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், நாம் உணவை மிகவும் வேகமாக உண்ணும் போது, உடலில் கலோரிகள் அதிகரித்து, உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா கூறுகையில், வயிறு நிரம்பியிருப்பதை மூளை அறிந்து கொள்ள, சுமார் 20 நிமிடங்கள் ஆகும். வேகமாக மென்று சாப்பிடுவதால், சாப்பிட்டு முடித்த பிறகு மனநிறைவு தான் ஏற்படும். இது கலோரி அதிகரிப்புக்கும், உடல் எடை அதிகரிப்புக்கு வழி அவகுக்கிறது.
வயிற்று சாம்பந்தமான பிரச்சனைகள்
வயிற்று உப்புசம், வாயு அல்லது அஜீரணம் போன்ற பிரச்சனைகளை நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொள்வதுண்டு. இந்த பிரச்சனையை அடிக்கடி சந்திப்பவர்கள், உணவை மெதுவாக சாப்பிட்டு வந்தால், இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல், நம்மை நாமே தற்காத்து கொள்ளலாம்.
ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா கூறுகையில், “மெல்லும் உணவை உமிழ்நீருடன் நன்றாகக் சேர்த்து உண்ணும் போது, இது சீரான செரிமான செயல்முறைக்கு உதவுகிறது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள், தங்கள் உணவை அதிகமாக மென்று சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளை உட்கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதே போல், அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயட்டெடிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆராய்ச்சி மெதுவாக மெல்லும் போது பசியின்மை குறைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.