மஸ்க் – மார்க் இடையேயான சண்டையை X தளத்தில் பார்வையிடலாம்

டுவிட்டர் எனப்படும் X நிறுவனர் எலோன் மஸ்க்கிற்கும், Meta நிறுவனர் மார்க் ஸக்கர்பர்கிற்கும் இடையே கூண்டுச் சண்டை நடக்கவுள்ளது.
அதற்கமைய, இந்த சண்டை X தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று மஸ்க் தெரிவித்தார்.
இருவரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காகச் சண்டையிட ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
“நிதி திரட்டுவதற்கு நம்பகமான தளத்தைப் பயன்படுத்த வேண்டும் அல்லவா?” என்று ஸக்கர்பர்க் Threads தளத்தில் மஸ்க்கின் அறிவிப்புக்குப் பதிலளித்தார்.
மஸ்க் சென்ற வருடம் Twitter தளத்தை நிர்வகிக்க ஆரம்பித்தது முதல் ஏற்பட்ட பிரச்சினைகளை ஸக்கர்பர்க் சுட்டிக்காட்டும் விதத்தில் அந்த பதில் அமைந்ததாகக் கூறப்படுகிறது.
சென்ற மாதம் ஸக்கர்பர்க் Threads தளத்தை அறிமுகம் செய்த பிறகு இருவருக்கும் இடையில் நேரடி வணிகப் போட்டி தொடங்கியது.
(Visited 11 times, 1 visits today)