சீனாவில் நிலநடுக்கம் – 21 பேர் படு காயம்
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பிங்யுவான் கவுண்டியில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதில் 21 பேர் காயமடைந்தனர்.என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:33 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, Dezhou மற்றும் Liaocheng நகரங்களைச் சேர்ந்த 21 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் விளைவாக 126 வீடுகள் இடிந்து விழுந்ததாக மாநில ஒளிபரப்பு சிசிடிவி தெரிவித்துள்ளது.
அவசர மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங், நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ தொலைவில், ஒரே இரவில் அதிர்வுகளை உணர்ந்ததாக பெய்ஜிங் முனிசிபல் பூகம்ப பணியகம் தெரிவித்துள்ளது.