செய்தி

சர்ச்சைக்குரிய பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம் ஆரம்பம்!

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (04.08.2023) காலை ஆரம்பமாகி சிறப்புற இடம்பெற்று வருகின்றது.

இதன்போது பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு உற்சவம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதம குருவாக திருஞானசம்பந்த குருக்கள், ஆலயபூசகர் சிவபாதன் கணேசபுவன் ஆகியோர்களால் காலை 8 மணியளவில் விஷேட அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 11.30 மணியளவில் விநாயக பெருமானுக்கும் பரிவார மூர்திகளுக்கும் விஷேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்குதலும், களாஞ்சி பிரசாதம் வழங்குதலும் இடம்பெற்று அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆலய வளாகத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று மாலை கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு ஆலய பூசகரால் பாரம்பரிய முறைப்படி பூசை வழிபாடுகள் இடம்பெற்று நாளை (5) அதிகாலை 4 மணியளவில் பரிகலம் வழிவிடுதல் நிகழ்வு இடம்பெற்று பொங்கல் உற்சவம் நிறைவுறும்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து சட்ட விரோதமாக பௌத்த விகாரை அமைத்து பல்வேறு நெருக்கடிகள் வழங்கப்பட்டு வந்திருந்தது. தற்போது குறித்த ஆலயத்தின் வழிபாடுகள் தொடர்ச்சியாக ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!