இலங்கை

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தற்கொலை! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

எப்பாவெலவில் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

எப்பாவெல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று கழுத்தை நெரித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது சகோதரருடன் ஏற்பட்ட முரண்பாடே தற்கொலைக்கான காரணம் என பொலிஸ் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், நேற்று தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் முன்னதாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஒரு சகோதரனும் சகோதரியும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர், மற்ற இரு சகோதரர்களில் ஒருவர் தோட்டத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று கழுத்தை நெரித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு சகோதரர்களில் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!