இந்தியா

300 கோடி லோன் குடுங்க ரயில் வாங்கணும்… ஆடிப்போன பெண் ஊழியர்!

இந்தியாவில் நபர் ஒருவர் பெண் வங்கி ஊழியரிடம் தொலைபேசியில் ரயில் வாங்க 300 கோடி லோன் வேண்டும் என கேட்ட ஆடியோ இணையத்தில் வைரலானது.

வங்கி ஊழியர்கள் தொலைபேசி வாயிலாக லோன் (Loan) வேண்டுமா என்று கேட்பது மக்களின் வாழ்வில் நடக்கும் அன்றாட நிகழ்வாகும்.அந்த வகையில் லோன் கேட்ட பெண் ஊழியரை நபர் ஒருவர் கேட்ட கடன் தொகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Loan Request Of Rs 300 Crore For Buying Train Leaves Bank Employee  Speechless - News18

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வங்கி ஊழியர் – நபர் தொடர்பான ஆடியோ ஒன்று நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த ஆடியோவில் நபர் ஒருவருக்கு போன் செய்யும் பெண் வங்கி ஊழியர் தன்னை நிஷா பாத்கர் என அறிமுகம் செய்து கொள்கிறார்.

 

பின் உங்களுக்கு கடன் உதவி (Loan) வேண்டுமா என கேட்க, மறுமுனையில் பேசிய ஆண் ரயில் வாங்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று கூறியுள்ளார். அதற்காக 300 கோடி கடன் வழங்குமாறு அவர் கேட்க, நிஷா ஒரு கணம் அதிர்ந்து போனார்.

எனினும் தனது பேச்சை தொடர்ந்த நிஷா, இதற்கு முன்பு நீங்கள் ஏதேனும் லோன் வாங்கி இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். ஹீரோ சைக்கிள் வாங்குவதற்காக 1,600 ரூபாய் லோன் வாங்கியதாக கூறி அந்த நபர் மேலும் ஊழியரை கடுப்பாக்கினார்.

இந்த ஆடியோ ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள வைரலாகியுள்ளது. வங்கி ஊழியருக்கு இது தேவை தான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே