உக்ரைனின் தானிய துறைமுகங்களை தாக்கிய ரஷ்யா – உலக மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தின் தெற்கில் உள்ள துறைமுகம் மற்றும் தொழில்துறை வசதிகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் துறைமுகத்தின் அருகாமையில் உள்ள தானிய சேமிப்பு கிடங்கு ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை, கடலின் மேற்பகுதியில் உலாவும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குவதற்கு ராக்கெட்டுகளை ஏவி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததது.
இந்நிலையில், தற்போது ருமேனியாவில் இருந்து டான்யூப் ஆற்றின் குறுக்கே உள்ள உள்நாட்டு துறைமுகம் உட்பட ஒடெசா பிராந்தியத்தின் இஸ்மாயில் துறைமுகங்களை ரஷ்யா தாக்கி உள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு உலகளாவிய தானிய விலைகள் உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன், உக்ரேனிய தானியமானது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இருப்பினும், ரஷ்யா கொலை, பட்டினி மற்றும் பயங்கரவாதத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்து பயணிக்கிறது என்று கூறியுள்ளது.
மேலும், இந்த தாக்குதல் ஆனது உக்ரேனிய ஆளில்லா விமானங்கள், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தாக்குதல் நடத்தியதை அடுத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.