பல லட்சம் பணம் செலவழித்து நாயாக மாறிய நபர்

டோகோ என்ற ஜப்பானியர் 2 மில்லியன் ஜப்பானிய யென்களை (46 இலட்சம் இலங்கை ரூபா) செலவழித்து நாயாக மாற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாயாக இருப்பது தனது வாழ்க்கையில் ஒரு கனவு என்று டோகோ கூறியுள்ளார்.
டோகோவின் கனவை நனவாக்கும் வகையில், ஜப்பானில் தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு ஆடைகளை வடிவமைக்கும் செபெட் என்ற நிறுவனம் பல பணிகளை செய்துள்ளது.
40 நாட்களில் அவருக்கான உண்மையான நாய் உடையை அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. டோகோ, ‘நான் ஒரு மிருகமாக இருக்க விரும்புகிறேன்’ என்ற யூடியூப் சேனலை நடத்துகிறார்.
அங்கு அவர் பூங்காவில் ஒரு நாயாக நண்பர்களை உருவாக்குவது மற்றும் பிற நாய்கள் மற்றும் மக்களைத் தவிர்ப்பது போன்ற காணொளியை பதிவேற்றுகிறார்.
அந்த காணொளி ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
(Visited 19 times, 1 visits today)