தமிழ் கட்சிகளை சந்திக்கும் இந்திய உயர்ஸ்தானிகர்
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிற்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையில் நாளை செவ்வாய்க்கிழமை (01) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் கலையரசன் ஆகியோருடன் ரெலோ கட்சி சார்பாக செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், விநோதரலிங்கம் ஆகியோரும் புளொட் தலைவர் சித்தார்த்தனும் கலந்துகொள்ளவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து கொழும்பில் இடம்பெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி முடிவுக்கு வந்த நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது