பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 35பேர் உயிரிழப்பு!
வடமேற்கு பாகிஸ்தானில் தீவிர இஸ்லாமியக் கட்சியின் அரசியல் கூட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள கர் நகரில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-எஃப் (JUI-F) கட்சியின் 400 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கூடியபோது இந்த குண்டுவெடிப்பு நடத்தது
“மருத்துவமனையில் 39 இறந்த உடல்கள் இருப்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியும், அத்துடன் 123 பேர் காயமடைந்துள்ளனர், இதில் 17 பேர் ஆபத்தானநிலையில் உள்ளனர்” என்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுகாதார அமைச்சர் ரியாஸ் அன்வர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் ISIS குழு சமீபத்தில் JUI-F க்கு எதிராக தாக்குதல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது