வாழ்வியல்

சுயிங்கம் மெல்பவரா நீங்கள்? உங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பதற்காக சுயிங்கம் மெல்லும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள். சிலர் சுயிங்கம் சுவைப்பது பசியை கட்டுப்படுத்தும் என்று கருதுகிறார்கள்.

உடல் எடையை குறைப்பதற்கு உதவும் என்பது சிலரது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் உடல் எடை இழப்புக்கு சுயிங்கம் உதவாது. அதே வேளையில் உட்கொள்ளும் கலோரி அளவை கட்டுப்படுத்துவதற்கு உதவி செய்யும். சுயிங்கம் மெல்லுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்ப்போம்!

The Surprising Advantages of Chewing Gum: How It Can Promote Better Oral  Health |

கலோரிகள் எரிக்கப்படும்:

சுயிங்கம் மெல்லும் போது வாய் அடிக்கடி நகரும். அப்படி வாய் அசைபோடும்போது எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். அப்படி எரிக்கப்படும் கலோரிகள் உடல் எடையை குறைக்கும் மற்ற நடவடிக்கைகளில் பிரதிபலிக்கும். குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போது எரிக்கப்படும் கலோரிகளுடன் இந்த கலோரிகளும் சேரும். அதனால் எடை குறைப்புக்கு வித்திடும். அதற்காக சுயிங்கம் மெல்லுவது மட்டுமே எடை இழப்புக்கு உதவாது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

Teeth Cleaning Chewing Gum Improves Your Oral Health | Florida Dentist

பசியைக் குறைக்கும்:

சுயிங்கம் பசியைக் குறைக்கும் திறனைக் கொண்டது. அதனால் தான் உடல் எடையை குறைக்க உதவுவதாக பலரும் நம்புகிறார்கள். சுயிங்கத்தை மெல்லும் போது ஏதோ சாப்பிடுவதாக மூளையை நம்ப வைக்கும். அதற்கேற்ப மூளையின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும். பசியின் வீரியம் குறைந்துவிடும். அதனால் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

Chewing Gum: Good or Bad?

நொறுக்குத் தீனியை கட்டுப்படுத்கட்டுப்படுத்தும்:

ஏதோ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணர்வை தருவதால் நொறுக்குத்தீனி சாப்பிடும் ஆர்வம் குறைய தொடங்கும். அதனால் உணவுக்கு இடையே கூடுதல் கலோரிகளை உண்ணாமல் தடுக்க முடியும். சிலருக்கு சுயிங்கம் மெல்லுவதே நொறுக்குத்தீனி போன்ற இதர உணவு பொருட்களை உண்ட திருப்தியை கொடுத்துவிடும். அதன் மூலம் தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை உண்பதை தவிர்க்க முடியும்.

Can chewing gum really clean your mouth? | Red Pine Dental Salt Lake City,  UT

வயிறு நிறைவாக இருக்கும்:

சுயிங்கம் மெல்லும்போது நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருப்பது போன்ற எண்ணம் மேலிடும். பசி உணர்வு சற்றென்று எட்டிப் பார்க்காது. சாப்பிடும் நேரம் நெருங்கினாலும் பசி குறைவாக இருப்பதாகவே உணர்வீர்கள். அதனால் குறைவாக சாப்பிடுவீர்கள். உட்கொள்ளப்படும் கலோரிகளின் எண்ணிக்கையும் குறைந்து போய்விடும்.

அதற்காக சுயிங்கத்தை தொடர்ந்து மென்று கொண்டே இருக்கக்கூடாது. சுயிங்கம் மெல்லுவது முகத்தை வடிவமைக்க உதவும் என்று சிலர் நம்புகிறார்கள். அதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை.

நன்றி – கல்கி

(Visited 15 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content