ரஷ்யா – ஆபிரிக்க உறவு முன்னோக்கி நகர்கின்றன!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஆபிரிக்க ஜனாதிபதி ரமபோசா ஆகியோரின் சந்திப்பிற்கு பிறகு இருநாட்டு உறவுகளும் முன்னோக்கி நகர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விளாடிமிர் புடின் இன்று (29.07) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தனது தென்னாப்பிரிக்கப் பிரதமர் சிரில் ராமபோசாவைச் சந்தித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிரில் ரமபோஷா, சந்திப்பு “வெற்றிகரமானது” என்றுக் கூறினார். அத்துடன் “ரஷ்யாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான உறவை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரு பிரகடனம் எங்களுக்கு கிடைத்துள்ளது” என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதித் திட்டத்தை எடுக்குமாறு நேற்று ஆபிரிக்கத் தலைவர்கள் புடினுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
உக்ரேனிய தானியங்களை உலகின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் புதிய ஒப்பந்தத்தை உருவாக்கவும் அவர்கள் ரஷ்ய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தனர்.