அயர்லாந்தில் வாழும் அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை

அயர்லாந்தில் வாழும் அமெரிக்கர்கள் குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக நடப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தலைநகர் டப்லினில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அண்மையில் நியூயோர்க் நகரைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர் அங்குத் தாக்கப்பட்டதை அடுத்து அந்த எச்சரிக்கை வந்துள்ளது.
இம்மாதம் 19ஆம் திகதி 57 வயது ஸ்டீபன் டெர்மினி இளையர்கள் சிலரால் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அவர் கடுமையாகக் காயமுற்றார்.
அதை அடுத்து அமெரிக்கர்கள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் சுற்றுப்புறங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும் தூதரகம் கூறியது.
பொது இடங்களில் நடக்கும்போதும் கைத்தொலைபேசியைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)